Cinema

ஊரடங்கால் பணமில்லாமல் நடிகர் தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக திரையுலகில் தினந்தோறும் கூலி வாங்கி வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்கள் மட்டுமின்றி ஒரு சில நடிகர்களும் வறுமையில் இருக்கிறார்கள் என்பதும் அந்த நடிகர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மும்பையை சேர்ந்த சின்னத்திரை நடிகர் மன்மீத் கிரேவல் என்பவர் லாக்டவுன் காரணமாக ஏற்பட்ட வறுமையால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது. மும்பையைச் சேர்ந்த மன்மீத் கிரேவல் சில ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாய்ப்பும் இல்லாமல் கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கடன்காரர்கள் கடனைக் கேட்டு நெருக்கியதால் மன விரக்தி அடைந்த அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
லாக்டவுன் வறுமை காரணமாக சின்னத்திரை நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading