Local

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 110 பில்லியன் ஒதுக்கீடு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்காக 2027  வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 2027 வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தி வரும் நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் எமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அரச துறையின் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ரூபா 15,750 இனால் அதிகரித்ததன் மூலமும் வருடாந்த சம்பள ஏற்றத்தின் பெறுமதியை 80% வரை அதிகரித்ததன் மூலமும் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கு ரூபாய் 330 பில்லியன் செலவாகின்றது.

இந்த சம்பளத் திருத்தம் 3 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட அதேவேளை, அதன் இறுதிக் கட்டம் 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபாய் 110 பில்லியன் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading