Sports

ஆடவர், மகளிர் இணைந்து விளையாடும் சமத்துவ கிரிக்கெட்

zaheer khan to launch mixed gender t20 league in germany: சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், ஒரே அணியில் ஆடவர் மற்றும் மகளிர் இணைந்து விளையாடும் Equal என்ற பாலின சமத்துவ T20 லீக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Equal பாலின சமத்துவ T20 லீக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாகீர் கான் நடத்தி வரும் Anchor Sports AB என்ற விளையாட்டு நிறுவனம், ஜேர்மன் கிரிக்கெட் கூட்டமைப்புடன் இணைந்து இந்த லீக்கை நடத்த உள்ளது.

ஆடவர், மகளிர் இணைந்து விளையாடும் சமத்துவ கிரிக்கெட்; ஜேர்மனியில் அறிமுகம் செய்யும் ஜாகீர் கான் | Zaheer Khan To Launch Mixed Gender T20 League

5 அணிகள் கொண்ட இந்த லீக்கின் முதல் பதிப்பு, 2027 ஆகஸ்ட் மாதம் ஜேர்மனியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த லீக்கில் 5 அணிகள் 12 டி20 போட்டிகளில் போட்டியிடும், ஒவ்வொரு அணியிலும் 18 வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு ஆடும் லெவனிலும் 6 மகளிரும் 5 ஆடவர்களும் இருப்பார்கள்.

இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசிய ஜாகீர் கான், “மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு.

குறிப்பாக ஐரோப்பா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் அதன் வளர்ச்சியானது, நாம் இந்த விளையாட்டை எந்த அளவிற்கு பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்” என தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் கிரிக்கெட் கூட்டமைப்பின் (DCB) தலைவர் செவெரின் வைஸ், “ஜேர்மனி முழுவதும் ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

தற்போதுள்ள அடித்தளத்தை வலுப்படுத்தவும், அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும், கிரிக்கெட்டை உள்ளூர் சமூகங்களுக்குக் கொண்டு செல்லவும், இந்த விளையாட்டை பரந்த பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தவும் ‘Equal’ எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading