ஹவுதி ரியாத் வர்த்தக மைய கோபுர மீது தாக்குதல் …!!!
சவூதி தலைநகர் ரியாத் வர்த்தக மைய கோபுரம் மீது ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் மூலம் தாக்கியுள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அதில் இரண்டு இந்தியர்கள் இரண்டு சவூதி குடிமக்கள் மூன்று நேபாள பிரஜைகள் மற்றும் நான்கு எகிப்தியக் குடிமக்கள் அடங்குவர்.
ஏற்கனவே இந்த கோபுரம் கடந்த வாரமும் குறிவைக்கப்பட்டது .லெ இந்தத் தாக்குதலை பனானும் கத்தாரும் வன்மையாகக் கண்டித்துள்ளன.
லெபனான் பிரதமர் நவாப் சலாம் எக்ஸ் தளத்தில் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார். இது ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு வெட்கக்கேடான ஆக்கிரமிப்புச் செயல் என்றும் சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் சர்வதேசச் சட்டத்தை மீறிய செயல் என்றும் கத்தார் கூறியுள்ளது.

You must be logged in to post a comment.