Technology

ஆண்ட்ராய்டு போன் யூசர்கள் கவனத்திற்கு: 25 மோசடி செயலிகளின் பட்டியல் வெளியீடு

ஸ்மார்ட்போன்களில் இருந்து தகவல்களை திருடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே அன்இன்ஸ்டால் செய்துவிடவும்.

வளர்ச்சியின் உச்சத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளது. இதன்காணரமாகவே மூலை முடுக்கெல்லாம் குற்றங்கள் அடுத்தடுத்து குற்றங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக பிளே ஸ்டோரிலுள்ள செயலிகள் மூலம் சைபர் மோசடிகள் இடம்பெறுகின்றன.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான மெக்கஃபீ (McAfee) 25 மோசடி செயலிகளை ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோரில் இருந்து கண்டறிந்துள்ளன.

பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இந்த செயலிகள் நிறுவப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

“இந்த பட்டியலில் உள்ள சில செயலிகளை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மொத்தமாக 3 இலட்சத்து 38 ஆயிரத்து 300 மொபைல்களில் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இது போன்று இரட்டை வேடமிட்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் உலாவிய ஆப்ஸ்களை ’ஸாமால்சியஸ்’ என்று அழைக்கின்றனர்.

பெரும்பாலும் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் உள்ள தகவல் சாதனங்களில் இந்த செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

Oruvan

Google play

குறித்த செயலிகளின் பட்டியல்

  • எசன்சியல் ஹாரோஸ்கோப் ஃபார் ஆண்ட்ராய்டு (Essential Horoscope for Android) – ஒரு இலட்சம் பதிவிறக்கம்
  • 3டி ஸ்கின் எடிட்டர் ஃபார் பிஇ மைன்கிராஃப்ட் (3D Skin Editor for PE Minecraft) – ஒரு இலட்சம் பதிவிறக்கம்
  • லோகோ மேக்கர் ப்ரோ (Logo Maker Pro) – ஒரு இலட்சம் பதிவிறக்கம்
  • ஆட்டோ கிளிக் ரிப்பீட்டர் (Auto Click Repeater) – பத்தாயிரம் பதிவிறக்கம்
  • கவுண்ட் ஈசி கலோரி கால்குலேட்டர் (Count Easy Calorie Calculator) – பத்தாயிரம் பதிவிறக்கம்
  • சவுண்ட் வால்யூம் எக்ஸ்டெண்டர் (Sound Volume Extender) – ஐந்தாயிரம் பேர் பதிவிறக்கம்
  • லெட்டர் லிங்க் (LetterLink) – 1000 பதிவிறக்கம்
  • நியூமராலஜி: பெர்சனல் ஹாரோஸ்கோப் & நம்பர் பிரெடிக்‌ஷன் (NUMEROLOGY: PERSONAL HOROSCOPE &NUMBER PREDICTIONS) – 1000 பதிவிறக்கம்
  • ஸ்டெப் கீப்பர்: ஈசி பெடோமீட்டர் (Step Keeper: Easy Pedometer) – 500 பதிவிறக்கம்
  • டிராக் யுவர் ஸ்லீப் (Track Your Sleep) – 500 பதிவிறக்கம்
  • சவுண்ட் வால்யூம் பூஸ்டர் (Sound Volume Booster) – 100 பதிவிறக்கம்
  • அஸ்ட்ராலஜிக்கல் நேவிகேட்டர்: டெய்லி ஹாரோஸ்கோப் & டேரட் (Astrological Navigator: Daily Horoscope & Tarot) – 100 பதிவிறக்கம்
  • யுனிவெர்சல் கால்குலேட்டர் (Universal Calculator) – 100 பதிவிறக்கம்

மேற்குறித்த செயலிகள் உங்கள் மொபைலில் இருக்குமாயின் அதனை உடனே நீக்கிவிடவும். இது செயலிகள் மூலம் கடத்தப்படும் நமது தரவுகள் பாதுகாக்கப்படும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading