World

ஆப்கானிஸ்தானின் புதிய அரசு அறிவிப்பு வெளியானது!

ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள புதிய ஆட்சி தொடர்பான முக்கிய தகவல்களை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். முல்லா முகமது ஹாசன் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை பிரதமராக முல்லா அப்துல் கனி பராதர் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ,ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தாலிபான்களின் ஆதிக்கம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. கடந்த மாதம் 15ஆம் திகதி தலைநகர் காபூலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றினர். புதிய அரசு அமைப்பது தொடர்பான வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

அந்நிலையில் , ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று வெளியிட்டார்.

அதன்படி, சிராஜுதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசின் “உள்துறை அமைச்சர்” ஆக நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேபோல், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சராக மவுலவி அமிர்கான் முத்தாகி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லா அப்துல் ஹக் வாஸிக் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ,மவ்லவி காரி பாசிஹுதீன்ன் “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசாங்கத்தின்” இராணுவத் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading