World

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களை குறிவைக்கும் ஐ.எஸ். அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது,

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றதில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல், அங்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், குண்டஸ் நகரில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வெள்ளிக்கிழமை ஷியா மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100 பேர்வரை பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.

ஷியா முஸ்லிம்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதலிக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு ஐஎஸ் அமைப்புகள் தொடர்ந்து அங்கு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஷியா முஸ்லிம்களை குறி வைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது,.   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading