Sports

தோனியின் ஆட்டத்தை பார்த்து ட்வீட் செய்த கோலி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டெல்லி அணிக்கு எதிரான முதல் பிளே-ஆஃப் போட்டியின் இறுதி கட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுத்தார். இதன் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஆறு பந்துகளில் 18 ரன்களை சேர்த்து அசத்தினார் தோனி. இதில் ஒரு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும். அவரது ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆனந்தத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் தோனியின் ஆட்டத்தை பார்த்து அசந்து போன இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ட்வீட் செய்துள்ளார். இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading