Local

ஆயிரம் ரூபா பேச்சு வீண் பேச்சு!ஆயிரத்திற்கு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்

மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்னமும் அரசாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் இடையில் உடன்பாடுகள் எட்டப்படவில்லையென அறிய முடிகிறது.
1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு தற்போதைய சூழலிலிருந்து 300 ரூபா அதிகரிக்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதால் கம்பனிகள் ஒத்துழைப்பு வழங்க மறுப்புத் தெரிவித்துவருகி;ன்றன.
அரசாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதிலும் இன்னமும் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை.
அரசாங்க வழங்குவதாக கூறியுள்ள சலுகைகளையும் காட்டி மேலதிகமாக பல சலுகைகளை கம்பனிகள் கோரிவருவதால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மார்ச் மாதம் முதலாம் திகதி 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாதென அரசாங்கத்தி;ன் நம்பகமாக தகவல் அறியும் வட்டாரங்கள் மூலம் ‘மலைநாடு’ இணையத்துக்கு அறிய கிடைத்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் மார்ச் மாதம் முதலாம் திகதி கட்டாயம் 1000 ரூபா வழங்கப்படுமென கூறிவருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading