Local

பேஸ்புக் ஊடாக மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 7 பேர் கைது!

இணைத்தளம் ஊடாக பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி அவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தும் குழுவொன்று தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித விதானபதிரண இதனை தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து சந்தேகநபர்களும் 20 வயதுக்கும குறைந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் சிலரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading