இசைப்புயல் AR Rahman மகளுக்கு திருமணம்!


ஏ ஆர் ரஹ்மானின் மூத்த மகளும், பாடகருமான கத்தீஜா சவுண்ட் இன்ஜினியர் ரியாஸ்தீன் ஷேக் மொஹமத்தை மணம் புரிந்தார். இந்த செய்தியை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசையமைப்பாளர் ரஹ்மான் பகிர்ந்திருந்தார். கத்தீஜா-ரியாசின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நெருங்கிய உறவினர்கள் புடை சூழ இவர்களது திருமணம் நடந்தது.
ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த புகைப்படத்தில், புது மண ஜோடி கத்தீஜா-ரியாஸ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், மனைவி சயிரா பானு, மகன் அமீன், மகள் ரஹிமா இடம்பெற்றிருந்தனர். இவர்களொடு சமீபத்தில் உயிரிழந்த் ஏ ஆர் ரஹ்மானின் தாயார், கரீமாவின் புகைப்படமும் வைக்கபட்டிருந்தது.
படத்தை பகிர்ந்த இசைப்புயல், “புதுமண தம்பதிகளுக்கு இறைவன் அருள் புரியட்டும். எனது மகளின் திருமணத்திற்கு வாழ்த்திய, வாழ்த்தபோகும் அனைவருக்கும் நன்றி.” என் பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் வாழ்த்துகளையும் கூறி வருகின்றனர்.
