Local

இதுவரை 103 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து வெளியேற்றம் சவுதி தூதுவர் அறிவிப்பு!

சவூதி அரேபிய அரசானது அதன் தலைமைத்துவத்தின் வழிகாட்டுதலின் கீழ், சூடான் குடியரசில் சிக்கித்தவிக்கும் பல்வேறு நாட்டினரையும் வெளியேற்றும் முயற்சியின் தொடர்ச்சியாக, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 7 சவூதி பிரஜைகளும் மற்றும் அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, குவைத், சீனா மற்றும் சூடான் போன்ற நாடுகளைச் சேர்ந்த 229 பேர்களும் புதன்கிழமை மாலை ஜெத்தா நகரை வந்தடைந்தனர். அவர்கள் மன்னரின் கப்பல்களான “மக்கா” மற்றும் “ஜுபைல்”  மூலம் கொண்டு வரப்பட்டனர்.

அவர்கள் தத்தமது நாடுகளுக்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் சவூதி அரேபியா காட்டி வரும் ஆர்வத்தினையும் கெளரவ தூதுவர் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

வெளியேற்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சூடானில் இருந்து இதுவரை மொத்தமாக 103 நாடுகளைச் சேர்ந்த 5865 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். (246 சவூதி பிரஜைகள் மற்றும் 5619 பேர் ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்).

காலித் ஹமூத் அல்கஹ்தானி

இலங்கைக் குடியரசிக்கான சவூதி அரேபிய தூதுவர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading