World

திருமணத்திற்கு சென்ற கார் விபத்து 5 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி மாவட்டம் சோரம்பட்கன் கிராமத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் நேற்று இரவு கன்கீர் மாவட்டம் மார்கொட்லா கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பொலிரோ காரில் சென்றனர்.

ஜக்தரா என்ற கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லொரி மீது கார் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லொரி டிரைவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading