Local

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கோழி இறைச்சி!

இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டு நியாயமான விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதான உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வது போல் கோழி இறைச்சியும் இறக்குமதி செய்யப்பட்டு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பதற்கு வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்வாக்குகளே காரணம் என தெரிவித்த அவர், உற்பத்தியாளர்கள் நுகர்வோரை சுரண்டுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading