Cinema

பின்னணிப் பாடகி ரமணியம்மாள் திடீர் மரணம்!

சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் பிரபல்யமாகி பின்னணிப் பாடகியாக அறி்முகமான ரமணியம்மாள் (69 வயது) இன்று காலமானார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகமப‘ என்ற இசை நிகழ்ச்சி மூலம் திறமையை வெளிப்படுத்திய ரமணியம்மாள் பாடகியாக அறிமுகமானார். இவரை ‘ரொக் ஸ்டார் ரமணியம்மாள்‘ என்று அழைப்பார்கள்.

இதன்பின்னர், ‘காத்தவராயன்‘ திரைப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான ரமணியம்மாள், ‘ஹரிதாஸ்‘ ஜிங்கா, சண்டக்கோழி-2, ‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா‘ மற்றும் ‘காப்பான்‘ போன்ற திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

இவருடைய நாட்டுப்புறப் பாடல்கள் இரசிகர்களைக் கவர்ந்ததுடன் இவரின் குரலுக்குப் பல இரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், ரமணியம்மாளின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள், இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading