Sports

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு பாகிஸ்தான் அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இன்று அபு தாபியில் தொடங்கும் ‘சூப்பர் 12’ சுற்றின் முதல் போட்டியில் ‘குரூப் 1’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இதைத்தொடர்ந்து துபாயில் நடக்கும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

அக்டோபர் 24ம் திகதி ‘குரூப் 2’ பிரிவில் உள்ள பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலகக் கோப்யைில் அக்டோபர் 24ம் திகதி இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி இறுதிப்போட்டிக்கு முன் நடக்கும் இறுதிப்போட்டி போன்றது என பலர் கூறுகின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் இந்த போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்பு வேறு எந்த போட்டிக்கும் இருக்காது என குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் நாளை அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் இந்தியா உடனான போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

  1. பாபர் ஆஸம் (கேப்டன்)
  2. ரிஸ்வான்
  3. ஃபகார் ஜமான்
  4. ஹபீஸ்
  5. மாலிக்
  6. ஆசிஃப் அலி
  7. ஹைதர் அலி
  8. இமாத் வாசிம்
  9. ஷதாப் கான்
  10. ஹசன் அலி
  11. ஷாஹீன்
  12. ஹாரிஸ் ரவூப்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading