Local

பி.சி.ஆர். சோதனைகளை அதிகரிக்காவிட்டால் மீண்டும் பேராபத்து நிச்சயம்!

நாட்டில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், நாடெங்கும் எழுமாற்றாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை அரசு நடத்தவில்லையெனில் மீண்டும் பேராபத்து நிலைமை நிச்சயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading