Local

இந்தியா தோல்வி T20 தொடரை கைப்பற்றியது இலங்கை!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வௌியேறினர்.

இலங்கை அணி சார்பில் அதிரடி பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க 09 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அணித்தலைவர் தசுன் சானக 2 விக்கெட்டுக்களை வீழத்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading