Local

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் நேற்று (28) கொரோனா தொற்றால் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 41 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,324 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading