World

இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்

india summons pakistan envoy for pakistan ship collides with indian navy ship: சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் போர் கப்பல்

நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல் | India Summons Pak Ship Collides With Indian Navy

சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தூதர் சாத் அகமது வர்ரைச் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைத்து, பாகிஸ்தான் கடற்படைப் பிரிவுகளின் “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற நடத்தை” காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பயிற்சிகள், இராணுவ அணிவகுப்புகள் மற்றும் படை நகர்வுகள் குறித்த முன் அறிவிப்பு வழங்குவது தொடர்பான, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 1991 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் 10வது பிரிவை பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் செயல்பாடு நேரடியாக மீறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, அனைத்து இராணுவப் பிரிவுகளும் உரிய கவனத்துடன் செயல்படவும், இரு தரப்புக்கும் இடையிலான தொடர்புடைய ஒப்பந்தங்களின் விதிகளை மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு பாகிஸ்தானின் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதேபோன்ற ஒரு கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகப் பொறுப்பாளருக்கும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை மோதல் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டாலும், இந்திய கப்பலைகளை நோக்கி அதிவேகமாக பாதுகாப்பற்ற முறையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல் நெருங்கி வந்ததாகவே தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவச் சொத்துக்களுக்கு இடையே நடந்த முதல் மோதல் இதுவாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading