Sports

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சமியின் மனைவி வெளியிட்ட கவர்ச்சிப் படத்தால் பரபரப்பு!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்களில் ஒரு சாரார் அவரை விமர்சித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் சீனியர் வீரராக வலம் வருபவர் முகமது ஷமி. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐரா என்ற மகள் உள்ளார்.

ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தனது கணவரும், அவரது பெற்றோரும், தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஹசின் ஜஹான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து இருவரும் பிரிந்தனர்.

இருந்த போதிலும் இருவரும் இன்னும் விவாகரத்து பெற்று கொள்ளவில்லை. கணவனை பிரிந்த பின்பு மொடலிங் துறையில் ஈடுபாடு காட்டிய ஹசின் ஜஹான் அவ்வபோது மார்டன் ஆடைகளை அணிந்தவாறு புகைப்படங்களை பதிவிட்டுவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை ஹசின் வெளியிட்டார். அந்த க்ளோஸ் அப் புகைப்படத்தில் லிப்ஸ்டிக், மேக்கப் அணிந்தபடி மிக கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கிறார் ஹசின்.

புகைப்படத்தை பார்த்த பலரும் ஹசினின் அழகை வர்ணித்து பதிவிட்டுள்ளனர். அதே சமயம் ஒரு சாரார் ஹாசின் ஜஹானைப் பற்றி ட்ரோல் செய்தும், அநாகரிகமான கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர், மேலும் அவரின் கணவர் ஷமிக்கு டேக்-கும் செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading