Local

இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் 5 பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் கொவிட் தொற்றுக்குள்ளான 5 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர், விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது பதிவாகும் தொற்றாளர்களை விட பல மடங்கு தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், இதுவரை 19 கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப நல சுகாதார சேவை பணியகத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு அமைய சுமார் ஆயிரம் தாதியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தாதிய அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading