Sports

இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சென்னையில்?

13வது ஐசிசி 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் 5ம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் நொக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி இன்று முடிவு செய்கிறது.

இதில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி நடைபெறும் மைதானம் எது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அகமதாபாத்தில் இந்த போட்டியை நடத்த இந்தியா விரும்பும் நிலையில், பாகிஸ்தான் அங்கு விளையாட முடியாது என தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் அந்த போட்டி நடைபெறலாம் என தெரிகிறது. இருப்பினும் பாகிஸ்தான் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், அகமதாபாத்தில் விளையாடவேண்டி வரும். இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸி.க்கு எதிராக சென்னை அல்லது அகமதாபாத்தில் மோதும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading