Local

இந்து சமயத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இலங்கைக்கு பாதிப்பு?

இந்தோனேசியாவின் பென்குலு அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் சுமார் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

இந்தோனேசியாவில் இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது எச்சரிக்கை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் ஏதும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடற்கரை பகுதியில் உள்ள மக்களின் பொது வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளது.

குறித்த தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading