Local

கொரோனாவுக்குப் பின் இலங்கைக்கு வந்த அதி சொகுசு பயணிகள் கப்பல்!

சொகுசு கப்பல்

அமெரிக்காவின் வைக்கிங் மார்ஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல், இன்று 900 பயணிகளுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததாகச் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நோர்வே நாட்டுக் கொடியின் கீழ்வந்த இந்தக் கப்பல் கடந்த 16ம் திகதி, இலங்கை வருவதற்காக இந்தியாவின் கோவாவிலிருந்து புறப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றுலாப் பயணிகள் கண்டி, பின்னவெல, காலியில் நகரச் சுற்றுப்பயணங்கள், கொழும்பில் நடைப் பயணம், முத்துராஜவெல மற்றும் ஆற்று படகுச் சுற்றுலா சவாரிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

கொவிட் தொற்றுக்குப் பின்னர் முதலாவது சொகுசு பயணிகள் கப்பல் இன்று (18) இலங்கை வந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading