World

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் சுமார் 20 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தோனேசிய கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி அச்சுறுத்தல் குறித்து வெளியான அறிவிப்பு | No Tsunami Threat To Sl Earthquake Near Indonesia

எனினும் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவுமில்லை என்று தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது என்பதையும் அந்த மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச முகவரகங்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading