Local

இந்த அரசாங்கம் எந்த அரசும் செய்யாத அளவுக்கு இந்த நாட்டை விற்றுச் சாப்பிடுகிறது!

அரசாங்கம் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது. அதனால் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து இன மக்களும் போராடியது போன்று தற்போது இரண்டாவது சுதந்திர விடுதலை போராட்டத்துக்கு அனைத்து இன மக்களும் ஒன்றிணையவேண்டும் என எல்லே குணவங்ச தேரர் அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஆளும் அரசாங்கம் வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவுக்கு இந்த நாட்டை விற்றுச் சாப்பிடும் முறையை ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டு செல்கின்றது.

வானம் மற்றும் கடல் எனும் இரண்டு இடங்களிலும் எமக்கு பிரச்சினை இருக்கின்றது. அனைத்து பக்கத்தாலும் எமக்கு துரதிஷ்டமான நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

மேலும் ,நாங்கள் பல வெளிநாட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டில்லை. கைச்சாத்திட்டிருந்தால் பிரச்சினை ஏற்படும்.

மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் எமது கனிம மணல்.போஸ்பேட், இல்மனய்ட், தங்கம் உட்பட பல கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு முயற்சித்துவருகின்றனர்.

சீனர்கள் இங்குவந்து எமது குளங்களை தோண்டுகின்றனர். குளங்களில் கனிம வளங்களை கொள்ளையடித்துக்கொண்டு, சேற்று மண்ணை அகற்றினால் குளத்தின் மூலம் எடுப்பதற்கு எந்த பிரயாேசனமும் இருக்காது.

நீர்ப்பாசனம் என்பது எமது பெரும் வளமாகும். இவ்வாறான தேசிய வளங்களுக்கு கைவைக்க இடமளித்து அரசாங்கம் பார்த்துக்கொண்டிருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading