Local

பாண் விலை அதிகரிக்க அனுமதியில்லை!

பாண் விலையை அதிகரிக்க அனுமதிக்கப் போவதில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கோதுமை விலை அதிகரிப்பிற்காக பேக்கரி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று திங்கட்கிழமை முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைத் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading