World

இயற்கை உரமாக மாறும் மனித உடல்கள்!

மனித உடல்களை மண்ணாகவும் உரமாகவும் மாற்ற வாஷிங்டன் மாநிலம் அனுமதியளித்துள்ளது.

பொதுவாக மனித உடல்களை எரிப்பது அல்லது புதைப்பது வழக்கம் ஆனால் இனி உரமாக மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு அமெரிக்காவில் அடுத்தடுத்த ஐந்து நகரங்கள் ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது இந்த வரிசையில் நியூயோர்க்கும் இணைந்துள்ளது.

எமது அன்புக்குரியவர்களின் உடல்கள் பல நூற்றாண்டுகளாக, சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, பூமிக்கு அடியில் புதைக்கப்படுகின்றன அல்லது தகனம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு புதைக்கப்படும் அல்லது தகனம் செய்யப்படும் உடல்களை உரமாக மாற்றும் தொழில்நுட்பத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்.

இவ்வாறு இருக்கையில் வாஷிங்டன் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு தோட்டத்தில் பயன்படுத்துவதற்கு அன்புக்குரியவர்களின் எச்சங்களை உரம் கலந்த மண்ணாக மாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்

இந்த ஒப்பந்ததின் படி இந்த நடைமுறையை கட்டையால் செய்யப்பட்ட கண்டெய்னர் ஒன்றில் இறந்து போன மனிதனின் உடலை அதற்குள் வைத்து மரத்துகள்கள், செடி, கொடி ஆகியவற்றினால் நிரப்பி மூடி விடுவார்கள்.

இதனால் பற்றீரியாக்கள் விரைவிலேயே அந்த உடலை கெட்டுப் போகச் செய்து விடும் என செயல்முறை விளக்கங்கள் குறிப்பிடுகிறது.

இந்த உரம் சாதாரண மண்ணை விட பல மடங்கு உரம் மிக்கதாக இருக்கும் என சொல்லப்படுகின்றது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading