Local

சம்பந்தனை சந்தித்தார் மஹிந்த!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு சம்பந்தனின் இல்லத்தில்  இன்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டன.

சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு இதன்போது சம்பந்தன் மகிந்தவிடம் கோரியதாக கூறப்படுகின்றது.

இந்த கோரிக்கைக்கு மகிந்த ராஜபக்ச சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரியவருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading