Sports

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார் உலக சாதனை நாயகன் போல்ட்!

ஒலிம்பிக் வரலாற்றில் அதிசிறந்த குறுந்தூர ஓட்ட வீரரரும் உலக சாதனை நாயகனுமான யூசெய்ன் போல்ட் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார்.

தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை யூசெய்ன் போல்ட்டும் அவரது மனைவி கெசி பெனெட்டும் அறிவித்துள்ளனர்.

தந்தையர் தினமான ஞாயிறன்று இந்தத் தகவலை குழந்தைகளுடனான குடும்பப் படத்துடன் தனது குடுவிட்டர் பக்கத்தில் யூசெய்ன் போல்ட் பதிவிட்டிருந்தார்.

தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு தண்டர் போல்ட் மற்றும் சென். லியோ போல்ட் என பெயரிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

யூசெய்ன் போல்டுக்கும் கெசி பெனட்டுக்கும் கடந்த வருடம் மே மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரு மாதம் கழித்து ஒலிம்பியா லைட்னிங் என பெயர் சூட்டினர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading