World

பேய் பிடித்திருப்பதாக கூறி சிறுவனை அடித்து கொன்ற பெண்கள்!

இந்தியாவில் வேலூர் மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு, பேய் பிடித்துள்ளதாக கூறி தாய் உள்ளிட்ட 3 பெண்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி ,வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி, இவரது 7 வயது மகன் அடிக்கடி கூச்சலிட்டபடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று, சிறுவனை அழைத்துக்கொண்டு திலகவதி வந்தவாசி பகுதியில் உள்ள இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் விரட்ட சென்றுள்ளார்.

இவருடன் , உறவினர் பெண் பாக்கியலட்சுமி வயது 28, திலகவதி வயது 30, மற்றும் 30 வயதுடைய கவிதா ஆகிய பெண் இருந்துள்ளனர். வந்தவாசிக்கு செல்லும் வழியில் உள்ள கண்ணமங்கலம் பேருராட்சி மண்டபத்தில் சிறுவனுடன் பெண்கள் மூவரும் தங்கியுள்ளனர்.

அதன்படி ,இரவு நேரத்தில் சிறுவன் சபரி கூச்சலிட்டதாகவும், அப்போது பெண்கள் மூவரும் இணைந்து சிறுவனை தாக்கியதோடு கழுத்து பகுதியில் கையை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading