Local

இரண்டாக உடைகிறது சஜித் அணி! பிரதமராக ரணில் பதவியேற்கிறார்?

பிரதமர்  பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி, இரு நாட்கள் கடக்கவுள்ள நிலையிலும், புதிய பிரதமரின்கீழ் ஆட்சி அமையவில்லை. இந்நிலைமை நீடித்தால் இலங்கை பொருளாதாரம் மேலும் வங்குரோத்தடையும். அதேபோல இராணுவ பிரசன்னமும்  அதிகரிக்கப்பட்டால் சர்வதேச உதவிகள் தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

பிரதமர் பதவியை ஏற்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்பதற்கு, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனை சஜித் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டது. ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. நாட்டில் அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 19 ஐ மீள செயற்படுத்தும் நிபந்தனையுடன் – நாட்டு நிலையைக் கருதி, பதவியை ஏற்பதற்கு ரணில் சம்மதம் தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவுக்கு வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் அரசியல் அனுபவங்களை கொண்ட சிரேஷ்ட தலைவர் என்ற காரணத்தால் பெரும்பாலும் பிரதமராக ரணிலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமிக்ககூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாக பிளவு படும் என தெரியவருகின்றது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ சுயாதீனமாக செயற்படும் முடிவை அறிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading