EntertainmentWorld

இராஜினாமா செய்த பிரதமர் இல்ல பூனை!

பிரித்தானிய பிரதமர் இல்லத்தில் வாழ்ந்து வரும் பூனை ஒன்றைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான Chris Pincher என்பவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பிரித்தானிய நாடாளுமன்றத்தை உலுக்கி வரும் நிலையில், பிரித்தானிய நிதி அமைச்சரான ரிஷி சுனக்கும், சுகாதாரச் செயலரான சாஜித் ஜாவிதும் நேற்று தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், பிரதமர் இல்லத்தில் வாழ்ந்துவரும் புகழ்பெற்ற பூனையான Larryயின் ட்விட்டர் கணக்கில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில், தன்னால் இனி மனசாட்சியுடன் பிரதமருடன் வாழ இயலாது என்று Larry கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றில் அவர் வெளியேறவேண்டும், அல்லது நான் வெளியேறுகிறேன் என Larry கூறுவது போல் அந்த ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி வைரலாகியுள்ள நிலையில், போகாதே Larry, நீ மக்களின் பிரதமராக இருக்கலாம் என ஒருவரும், நீ போகக்கூடாது Larry, பிரதமர் இல்லத்திலேயே மக்களுடைய நம்பிக்கைக்குரிய ஒரே நபர் நீதான் என்று ஒருவரும், பிரதமர் பதவிக்கான போட்டியில் Larry என்று ஒருவரும் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading