Local

மிஸ்டர் பீன் போல செயற்படாதீர்கள் பிரதமர் ரணிலைப் பார்த்து கூறிய உறுப்பினர்!

மிஸ்டர் பீன் போன்று செயற்டாமல் பொறுப்புள்ள பிரதமராக மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் பிரதமரை நோக்கி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  இன்று பிரதமரிடமான கேள்வி நேரத்தின் போது விஜித்த ஹேரத் எம்.பி,

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி, இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்வு என்ன? அதேபோன்று எதிர்வரும் 23ஆம் திகதி எரிபொருள் கப்பல் வருவதாக அமைச்சர்கள் இந்த சபையில் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அந்த கப்பல் வருவது தொடர்பில் எந்த நம்பிக்கையும் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய அமைச்சர்களுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்டார்.

இதற்கு பதிலளிக்க எழுந்த பிரதமர், பதில் வழங்குவதற்கு முன்னர், அரசாங்கத்தை பொறுப்பேற்கின்றீர்களா இல்லையா என்பதற்கு மாத்திரம் பதில் சொல்லுங்கள். உங்களின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்பதில்லை என தெரிவித்தார். நீங்கள் பொறுப்பேற்பதாக குறிப்பிட்டீர்கள். இதில் ஏதாவது ஒன்றை தெரிவியுங்கள் என்றார்.

இதன்போது எழுந்த விஜித்த ஹேரத் எம்.பி. மிஸ்டர் பீன் போன்று செயற்படாது பொறுப்புள்ள பிரதமராக மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கையை தெரிவியுங்கள். நீங்கள் மிஸ்டர் பீன் பாேன்று செயற்படுவதாக இருந்தால் எதிர்க்கட்சிக்கு வந்து அமர்ந்துகொள்ளுங்கள்.

அதனால் நீங்கள் தற்போதுமிஸ்டர் பீன் ஆகவேண்டாம். நீங்கள் தற்போது நாட்டின் பொறுப்புமிக்க பிரதமர். அதனால் நாங்கள் கேட்கும் மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலளியுங்கள் அவ்வாறு இல்லாமல் தேவையற்ற பேச்சுக்களை பேசவேண்டாம் என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading