Local

இருண்ட காலத்தைக் கொண்ட நபர் நாட்டிற்கு தலைமை தாங்குகின்றார்!

இருண்ட கடந்த காலத்தைக் கொண்ட நபர் ஒருவர் நாட்டிற்கு தலைமை தாங்குகின்றார் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தலைவரினாலேயே வெள்ளை வான் என்ற கருத்துருவாக்கம் தோற்றம் பெற்றது, லசந்த விக்கிரமதுங்க போன்ற தலைவர்கள் கொல்லப்பட்டனர், போத்தல ஜயந்த, கீத் நொயர் போன்ற தலைவர்கள் தாக்கப்பட்டனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பிரகீத் லலித் குகனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒடுக்குமுறையை முன்னெடுக்கக் கூடிய அதிகாரம் மிக்க ஒருவர் அதிகாரத்தில் காணப்படுகின்றார், பொதுமக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தப்படுகின்றனர், அரசியல்தலைவர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,ஊடகங்களும் மிரட்டப்படுகின்றன என ஜேவிபியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading