Local

இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு விஷேட வரி!

இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரி அதிகரிப்பினால் இறக்குமதி செய்யப்படும் தயிர், ஆப்பிள், திராட்சை, பாலாடைக்கட்டி (சீஸ்) ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும், தோடம்பழம், பேரீச்சம்பழம் கிலோவொன்றுக்கான வரி 200 ரூபாவாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading