Local

இறக்குமதி செய்ய முடியாமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் கப்ரால் தெரிவிப்பு!

வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருட்களையும், சமையல் எரிவாயுவினை இறக்குமதி செய்ய முடியாமைக்கு டொலர் பற்றாக்குறையே காரணம் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மத்திய வங்கியின் ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளநர் தனது டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்

அரசியல் இலாபம் கருதி அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ரீதியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் கொவிட் 19 நிலைமையில் பல்வேறு இன்னல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தில் அரசியல் செய்ய வேண்டிய தேவை இலங்கையின் மத்திய பொருளாதாரத்திற்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொருட்கள் இறக்குமதிக்கான தடைக்கு தொடர்ச்சியாக நிலவும் டொலர் பற்றாக்குறையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் பட்சத்தில் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் காணப்படுகின்ற அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading