Local

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே பிரதான காரணம்! – ஐ.நாவில் விவாதம்

இலங்கையில் சீனாவின் கடன் பொறி தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கி இந்த வருடம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்திருந்தார்.

இதையடுத்து, அவர், மனித உரிமைகளில் வெளிநாட்டுக் கடன்களின் தாக்கம் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வரும், 2019 பெப்ரவரி – மார்ச் கூட்டத்தொடரில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

இது குறித்து, ஐ.நாவின் விசேட நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கியின் பேச்சாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிடுகையில், இந்த அறிக்கை பேரவையின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதற்கு முன்னதாக, பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இணையத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன்பொறியே காரணம் என்று குற்றம்சாட்டப்படு வரும் நிலையில், இந்த விவகாரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிரொலிக்கவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading