LocalNorth

புதுக்குடியிருப்பில் புலிகளின் ஆயுதங்கள் ஒரு தொகை மீட்பு!

புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த யுத்த உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 ஆடி ஷெல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள தேடுதல் மற்றும் குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading