Local

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

இலங்கையில் இன்று மேலும் 796 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 390 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும் ஹபராதுவை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும், நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண் ஒருவரும், நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாராங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading