Local

இலங்கையில் அவசர கால நிலை அமுல் விசேட வர்த்தமானி வெளியீடு!

நாடு முழுவதும் அவசரகால சட்டத்தின் சில பிரிவுகளை அமுல்படுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தின் சில பிரிவுகளை அமுல்படுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்பின்பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தரவினால் அதி விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் வைரஸ் பரவல் சூழ்நிலையில் மக்களுக்கான சேவைகளை தங்குதடையின்றி வழங்கவும், இயல்பு நிலையை முன்னெடுக்கவும் , சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவசரகால சட்ட சில பிரிவுகளை அமுல்படுத்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading