World

மகளுக்கு மது கலந்து கொடுத்து வன்கொடுமை செய்த தந்தை கைது!

தமிழகத்தில் மனைவி உதவியுடன் மகளுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து வன்கொடுமை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மெரினாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் வெகுநேரமாக தனியாக அமர்ந்திருந்துள்ளார். இதையடுத்து அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் துவங்கின.

அதில், சிறுமி செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சோ்ந்தவர் என்பதும் இவரது தாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், இவரது தந்தை குமார் கஸ்தூரி என்பரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கடந்த ஒரு மாதமாக குமார் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து தனது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததும் இதற்கு அவரது இரண்டாவது மனைவியும் துணையாக இருந்துள்ளார் என்ற அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.

இதையடுத்து புகாரின் பேரில் குமார் மற்றும் கஸ்தூரியை பொலிசார் கைது செய்துள்ளனர். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading