Local

இலங்கையில் இன்று 598 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு, மோதரை பகுதியிலுள்ள முதியோர் வசித்த 67 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டில் மேலும் 93 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 598 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 40  ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 36 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading