Local

இலங்கை கிரிக்கெட் அணி வலுவான நிலையில்!

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மிகவும் சிறப்பாக விளையாடிவருகின்றது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகளை கொண்டடெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இதன்படி, Centurion மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களை நிதானமாக பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, தினேஸ் சந்திமால் மற்றும் தனஞ்ஜயடிசில்வா ஜோடி மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது.

இந்த நிலையில், 79 ஓட்டங்களை பெற்ற நிலையில், உபாதைக்காரணமாக தனஞ்ஜயடிசில்வா மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும், தனஞ்ஜயடிசில்வா டெஸ்ட் போட்டிகளில் தனது 7 ஆவது அரைசதத்தினை இந்த போட்டியில் பெற்றுக்கொண்டிருந்தார்.

இதேவேளை, தினேஸ் சந்திமால் 85 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 49 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

மேலும், தென்னாபிரிக்க அணி சார்பில் Wiaan Mulder இதுவரையில், 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், இலங்கை அணியில், தசுன்ஷானக்க மற்றும் கசுன் ராஜித ஆகியோர் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading