Lead News

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 11 மாதங்களில் 11.1 வீதமாக அதிகரிப்பு!

வருடாந்த  உணவுப் பணவீக்கம் கடந்த 11 மாதங்களில் ஓகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 11.1% ஆக உயர்ந்துள்ளதாக நேற்று (21) வெளியிடப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத் (CSD) தரவு தெரிவிக்கிறது.

இதை விட அதிக அதிகரிப்பு கடைசியாக செப்டம்பர் 2020 இல் பதிவு செய்யப்பட்டது, அந்த மாதத்தில் உணவுப் பணவீக்கம்  12.7% ​​ஆக உயர்ந்தது.

கடந்த மாத உணவுப் பணவீக்கத்தின் அதிகரிப்பு, ஒரு குடும்பத்தின் அரிசி நுகர்வுச் செலவு சராசரியாக ரூ. 525.48 ஆல் உயர்ந்துள்ளது. காய்கறிகள் (ரூ. 339.30), தேங்காய் எண்ணெய் (ரூ. 241.63), தேங்காய் (ரூ. 186.91), மைசூர் பருப்பு (ரூ. 119.45) மற்றும் பெரிய வெங்காயம் (ரூ. 83.08).

இதன் விளைவாக ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுக் கூடையின் விலை சராசரியாக ரூ.2,248.07 ஆல் அதிகரித் துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading