World

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கொலை செய்த கொடூர மனைவி!

இந்தியாவில் குடும்ப பிரச்னை காரணமாக கொதிக்கும் வெந்நீரை கணவர் மீது ஊற்றி கொலை செய்த மனைவியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியை சேர்ந்தவர் சின்னையன்(62). இவருடைய மனைவி வீரம்மாள்(55). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இருவருக்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்னை வெடித்துள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த வீரம்மாள் வீட்டின் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து வந்து தனது கணவர் மேல் ஊற்றியுள்ளார்.

இதில் உடல் முழுவதும் வெந்து படுகாயத்துடன் துடித்த சின்னையா கதறி உள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு உடனடியாக சின்னையாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் வீரம்மாள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading