Local

இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாளாந்தம் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் சேவைகளைப் பெறும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 500 ஆல் அதிகரித்துள்ள அதேவேளை ஒருநாள் சேவைகளைப் பெறுவோரின் விண்ணப்பங்களின் சராசரி எண்ணிக்கை 1000ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் பின் ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் 12,158 பேர் கொழும்பு தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளனர்.

இதே காலப்பகுதியில் 11,242 பேர் சாதாரண சேவையின் கீழ்  கடவுச்சீட்டுக்காக விண்ணப்பம் செய்துள்ளனர்.
மேலும் கடந்த 10 நாட்களில் மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய அலுவலகங்களிலிருந்து 10,145 பேர் சேவைகளைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading