Local

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை காணப்படுகிறது!

பொது மக்கள் மத்தியில் கொவிட் வைரஸ் வேகமாக பரவிவரும் தன்மை காணப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாயின், தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading