World

மோசமடையும் நிலைமை அவசர நிலை பிரகடனம்!

கொரோனாவின் டெல்டா மாறுபாடு பரவல் காரணமாக மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

குவாத்தமாலாவில் நாளொன்றுக்கு புதிதாக 4000-க்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகி வருகிறது.

நாட்டில் மொத்தம் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மொத்தம் 11,000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாடு குவாத்தமாலாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாடு தொற்றை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக குவாத்தமாலா அரசு அறிவித்துள்ளது.

குவாத்தமாலா ஜனாதிபதி Alejandro Giammattei கூறியதாவது, டெல்டா மாறுாபடு வேகமாக பரவக்கூடியது.

இது புதிய தொற்று பரவல்களை ஏற்படுத்துகிறது. மாறுபாட்டின் தீவிரத்தை குறைக்க பல அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இதற்கு குவாத்தமாலா விதி விலக்கல்ல.

அவசர நிலை பிரகடனத்தின் கீழ், ஞயிற்றுக்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்படும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் மற்றும் பெரிய அளவிலான மக்கள் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி Alejandro Giammattei தெரிவித்துள்ளார்.         

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading